கைதி - 2 திரைப்படம் கைவிடப்படவில்லை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
நிகழ்வில் கைதி - 2 திரைப்படம் கைவிடப்பட்டதா? எனக் கேட்கப்பட்டது. இதற்கு லோகேஷ் கனகராஜ், “கைதி - 2 திரைப்படம் கைவிடப்படவில்லை. கூலியைத் தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கான கதையை இருவரிடமும் சொன்னேன். ஆனால், தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடிக்க இருவருக்கும் தயக்கம் இருந்தது. இதனால், அதிலிருந்து வெளியேறினேன்.
கடந்த 6 ஆண்டிகளுக்கு முன்பே மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் முன்பணம் வாங்கியிருந்ததால் அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் இணைந்தேன். இப்படம் முடிந்ததும் அடுத்தது கண்டிப்பாக கைதி - 2 திரைப்படம்தான். மேலும், விக்ரம் - 2, ரோலக்ஸ் திரைப்படங்களையும் இயக்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.