தெலுங்கில் முன்னணி நடிகராக இருகும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.
நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
தற்போது டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) எனப் பெயரிடப்பட்டுள்ள படம் ஆக.29இல் வெளியாகியது.
நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்தப் படம் 5 நாள்களில் ரூ.75.26 கோடி வசூலித்துள்ளது.
நானி 32
இந்நிலையில் நானியின் 32 ஆவது படத்தின் அறிவிப்பு செப்.5ஆம் தேதி காலை 11.04 மணிக்கு வெளியாகுமென நானி தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
நானியின் முதல் திரைப்படம் அஷ்ட சம்மா திரைப்படம் 2008ஆம் ஆண்டு செப்.5ஆம் தேதி வெளியானது.
16 வருட சினிமா பயணம்
தெலுங்கு சினிமாவில் 16 வருடங்கள் நிறைவடைய இருப்பதையொட்டி செப்.5ஆம் தேதி நானியின் 32ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது.
போஸ்டரில் கொடூரமான கொலை செய்பவராக இருப்பவர்போல் இருக்கிறது நானியின் கைகள்.