நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கோலி சோடா ரைசிங் டிரைலர்!

கோலி சோடா ரைசிங் விரைவில் வெளியாகிறது.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 3:24 pm IST

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான கோலி சோடா ரைசிங் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலி சோடா. சந்தையில் மூட்டை தூக்கும் 4 சிறுவர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கும் கதையாக வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தொடர்ந்து, கோலி சோடா - 2 தயாரானது. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

தற்போது, இயக்குநர் விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்கிற இணையத் தொடரை இயக்கியுள்ளார்.

கோலி படத்தில் நடித்தவர்களுடன் நடிகர்கள் சேரன், ஷ்யாம், அபிராமி, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன், திரில்லர் பாணியில் உருவாகியிருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இதன் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இத்தொடர், ஹாட்ஸ்டார் ஓடிடியில் வருகிற செப். 13 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.