பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

கௌதம் மேனன்- மம்மூட்டி படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

மம்மூட்டி, கௌதம் மேனன். - கோப்புப் படங்கள்.

Published On :7 செப்டம்பர் 2024, 10:50 am IST

நடிகர் மம்முட்டி நடிப்பில் இறுதியாக வெளியான டர்போ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.80 கோடி வரை வசூலித்தது.

இதற்கிடையே, நடிகர் மம்மூட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் கதை கேட்டதாகவும் அது அவருக்குப் பிடித்துப்போக தன் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியான நிலையில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கொச்சியில் பூஜையுடன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

இந்தப் படத்துக்கு டொமினிக் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்படம் காதலும் ஆக்‌ஷனும் கலந்த கதையாக இருக்கும் என்றும் மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் இதில் சமந்தா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான நண்பகல் நேரத்து மயக்கம், ரோர்ஸார்ச், கண்ணூர் ஸ்குவாட், காதல் தி கோர் உள்ளிட்ட படங்கள் அனைத்தும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.