கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

எம்.எஸ். பாஸ்கரின் ‘விடியும் காத்திரு’: மிரட்டும் முதல் பார்வை போஸ்டர்!

எம். எஸ். பாஸ்கரின் ‘விடியும் காத்திரு’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு குறித்து...

ms bhaskar

‘விடியும் காத்திரு’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் - படம்: எக்ஸ்

Published On :31 ஆகஸ்ட் 2026, 1:55 pm IST

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிரண்ட்ஸ் புரொடக்‌ஷன் ஹொவுஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார்.

எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

 ‘விடியும் காத்திரு’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்

‘விடியும் காத்திரு’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் - படம்: எக்ஸ்

தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டரில், பெரிதாக்கப்பட்ட கதவு சாவித் துவாரத்தின் வழியே பயத்தில் இருக்கும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் கவனம் ஈர்க்கிறது. மேலும், கதவில் இடம்பெற்றுள்ள “You Are Next” என்ற வாசகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மர்மத்தையும் அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘விடியும் காத்திரு’ திரைப்படத்தை உத்ரா புரொடக்‌ஷன் சார்பில் செ. ஹரி உத்ரா, தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

Summary

'Vidiyum Kaathiru' is a new film starring M.S. Bhaskar in the lead role. The first-look poster of the film has been released and is receiving a positive response from fans and the film fraternity alike.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.