/

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் தமிழ் முருகன்..! வைரலாகும் விடியோ!

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் விடியோ குறித்து...

News image

தமிழ் முருகன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் - படம்: எக்ஸ் / தனுஷ்

Updated On :11 ஜூலை 2026, 2:33 pm IST

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படமான தமிழ் முருகன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் விடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு யாரும் எதிர்பாராத ஒன்றாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்து வரும் தனுஷ் சமீபத்தில் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். அதில் ஆங்கிலத்தில் D - V என்கிற சொற்கள் இடம்பெற்றுள்ளன. இது யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. பலரும் வெங்கட் பிரபு என்றெல்லாம் கூறி வந்தார்கள்.

இந்த நிலையில், நேற்றிரவு படத்தின் அறிவிப்பு வெளியானது. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் என அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, வட சென்னை 2 படம் எடுக்கப்படாமல் இருக்க, சூர்யாவின் வாடிவாசல் படமும் முன் தயாரிப்புடன் எடுக்கப்படாமல் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அறிவுமதி எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கும் இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

'Tamil Murugan' from the Vetrimaaran-Dhanush duo..! First-look poster video!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.