இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

லப்பர் பந்து நாயகியின் புதிய திரைப்படம்..! முதல் பார்வை போஸ்டர்!

லப்பர் பந்து நாயகி நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ள புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து...

Poster of the new film starring Sanjana Krishnamoorthy.

சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / என்டர்டெயின்மென்ட்ஸ்.

Published On :

லப்பர் பந்து படத்தின் நாயகி நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் நடிகர் கிஷன் தாஸ் நடித்துள்ள புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டார். ஏஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் டி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ’சீ யூ’ ( See U ) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நாயகனாக கிஷன் தாஸும் நடித்துள்ளார்கள்.

நடிகர் கிஷன் தாஸ் கடைசியாக நடித்த ஆரோமலே திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி லப்பர் பந்து படத்தில் நடித்து புகழ்பெற்றார்.

தக் லைஃப் படத்தில் சஞ்சனா உதவி இயக்குநராக பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக பரிமளா அண்ட் கோ படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், புதிய படமான ’சீ யூ’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஜுனம் இசையமைத்து வருகிறார்.

நடிகர் ஆர்யா இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் வெளியீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

First-look poster of the 'Lubber Pandhu' actress's Sanjana Krishnamoorthy new film!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.