சென்னையில் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

8-லிருந்து 4 முழம்! விலையில்லா வேட்டி அளவைக் குறைத்த தவெக அரசு!

பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டியின் அளவு குறைக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் விஜய் பாலாஜி பேசியது குறித்து...

Vijay Balaji

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி - Youtube

Updated On :

தமிழ்நாட்டில் நான்கில் மூன்று பங்கு மக்கள் 4 முழ வேட்டியையே விரும்புவதால், பொங்கல் திருநாளில் 4 முழ வேட்டி வழங்கப்படும் என கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டில் பொங்கல் திருநாளில் வழங்கப்படும் விலையில்லா வேட்டியின் அளவை 8 முழத்திலிருந்து 4 முழமாக தவெக அரசு குறைத்திருப்பதால், நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாக திமுக எம்எல்ஏ ஆஸ்டின் குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, திமுக எம்எல்ஏ-வுக்கு பதிலளித்து அமைச்சர் விஜய் பாலாஜி பேசியதாவது, "தவெக ஆட்சியமைந்தவுடன் எனக்கு வந்த பெரும்பாலான கோரிக்கை மனுக்களில், கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக ஒரே ரகத்தில் வேட்டி, சேலைகள் வழங்கப்படுவதாகக் கூறியிருந்தனர். மேலும், இந்த முறை புதிய டிசைனில் மாற்றிக் கொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, முதல்வரின் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் துறைச் செயலர்கள் மற்றும் சரக அதிகாரிகள் மூலம் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது.

அவர்களில் பெரும்பாலான மக்கள் வெளுக்கப்படாத 8 முழ வேட்டி வேண்டாம் என்றும், வெளுக்கப்பட்ட 4 முழ வேட்டிதான் வேண்டும் என்று தெரிவித்தனர்.

இன்றைய காலகட்டத்தில் 4-ல் 3 பங்கு மக்கள், 4 முழ வேட்டியைத்தான் விரும்புகின்றனர்.

இதன் அடிப்படையில்தான், 4 முழ வேட்டியும், ஜரிகை தைத்த சேலையும் மாற்றிக் கொடுக்கப்படுகிறது.

திருவள்ளூர் சரகத்தில் பெடல் தறிகளில் தொடர் வேலைவாய்ப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 5,25,000 சேலைகளை அரசு நிச்சயமாகக் கொள்முதல் செய்யும்.

மேலும், தொடர் வேலைவாய்ப்புக்காக அரசு கொடுத்த அத்தனை மூலப்பொருள்களையும, வேட்டி - சேலைகளையும் அரசு பெற்றுக் கொள்ளும்" என்று தெரிவித்தார்.

Summary

The length of the free dhoti distributed for the Pongal festival will be reduced to 4 cubits, says Minister Vijay Balaji

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.