லஞ்சம், ஊழலைத் தடுக்கவே எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்கப்படுகிறது: அமைச்சர்
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படுவது லஞ்சம், ஊழலைத் தடுப்பதற்காகவே என அமைச்சர் விஜய் பாலாஜி கூறியது குறித்து...
அமைச்சர் விஜய் பாலாஜி - கோப்புப் படம்
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படுவது லஞ்சம், ஊழலைத் தடுப்பதற்காகவே என அமைச்சர் விஜய் பாலாஜி கூறியுள்ளார்.
எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்கப்படுவது குறித்த கேள்விக்கு அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளித்துப் பேசியதாவது, "எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்கப்படுவது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
ஒரு எம்எல்ஏ மக்களைப் பார்க்க வேண்டும் என்றால், அதற்கான போக்குவரத்துச் செலவுகள் உள்ளிட்டவையும் உள்ளன. இதனாலேயே அவர்கள் தவறான வழிக்குச் சென்றுவிடக் கூடாது. லஞ்சம், ஊழல் எதனால் வருகிறது என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
இந்தத் திட்டத்தை முதல்வராகவே அறிவிக்கவில்லை. ஒரு எம்எல்ஏ முன்வைத்த கோரிக்கையால்தான், அவர்களின் நலன் கருதி, இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.
மேலும், அடிப்படை வசதி இல்லாத எம்எல்ஏ விண்ணப்பித்தால் மட்டுமே வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
Summary
Cars are provided to MLAs specifically to prevent bribery and corruption, says Minister Vijay Balaji
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



