தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் எம்எல்ஏ! அரசியலாக்க வேண்டாம்: மாணிக்கம் தாகூர்

சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்டின் இருக்கை மாற்றம் குறித்து காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விளக்கமளித்து பற்றி...

MLA Tharahai Cuthbert | Congress Chief Manickam Tagore

தாரகை கத்பர்ட் | மாணிக்கம் தாகூர்

Published On :

சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்டின் இருக்கை மாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், எதிர்க்கட்சியினர் வரிசையில் அமர்ந்திருப்பது குறித்து மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "சட்டப்பேரவையில் இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதிதான்.

சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் சட்டபேரவைக் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் காரணமாக, இருக்கை மாற்றப்பட்டுள்ளது.

மேலும், கூட்டணிக் கட்சிகளின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களின் அமர்வை கருத்தில்கொண்டு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு அமைச்சர்களும் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர். பேரவைத் தலைவர் இந்த மாற்றத்தை செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஒரு வழக்கமான இருக்கை மாற்றத்தை வைத்து, இல்லாத அரசியல் அர்த்தங்களை கற்பனை செய்து பரப்ப வேண்டாம்.

செய்தியை செய்தியாகவே பாருங்கள்; அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Congress Chief Manickam Tagore explains the change of seat for Congress MLA Tharahai Cuthbert in the Legislative Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.