டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

வேட்டையன் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது.

வேட்டையன் போஸ்டர். - படம்: எக்ஸ் / லைகா

Published On :

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டப்பிங் பணிகள் மும்முரம்

இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் திரைக்கு வருகிறது.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, ஃபகத் பாசில், துஷாரா உள்ளிட்ட படக்குழுனர் தங்களது டப்பிங் பணிகளை முடித்துவிட்டனர்.

முதல் பாடல்

இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தில் ஹுகும், காவாலா ஆகிய பாடல்கள் மிகவும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் பட பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடல் செப்.9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.