நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் கடந்த 4 நாள்களில் எத்தனை கோடி வசூலித்துள்ளது என்பது குறித்து படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் நிறுவனம் இன்று(செப். 9) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த நிலையில், கோட் படம் திரைகளில் வெளியாகி நான்கு நாள்களில், ரூ. 288 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் இப்படத்தை கண்டு ரசிக்க பார்வையாளர்கள் அதிகளவில் வருகை தருவதால், வேலை நாளான திங்கள்கிழமையும் பல திரையரங்குகளில் கோட் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவே உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.