நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் செ.5. அன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். விரைவில் இதன் முதல் மாநாடு நடைபெறவிருக்கிறது.
அரசியல் அறிவிப்புடன் இறுதியாக, விஜய் - 69 படத்துடன் சினிமாவிலிருந்து விலகுவதாகவும் கூறியுள்ளார். இந்தப் படத்தை தான் இயக்குவதாக சமீபத்தில் ஹெச்.வினோத் உறுதிப்படுத்தி இருந்தார்.
விஜய் - சிம்ரன் கூட்டணி
தற்போது, இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் சிம்ரன் 2000இல் பிரியமானவளே, 2022இல் யூத் படத்தில் ஆள்தோட்ட பூபதி பாடலிலும் நடித்திருப்பார்.
2004இல் உதயா படத்திலும் விஜய்யுடன் நடித்திருப்பார். இது உண்மையானால், கிட்டதட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைகிறது என்பது குறுப்பிடத்தக்கது.
சமீபத்தில் சிம்ரன் ரஜினியுடன் பேட்ட படத்திலும் பிரசாந்த் உடன் அந்தகன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் தி லாஸ்ட் ஒன் படத்தில் நடிக்கிறார்.
விஜய் 69இல் மமிதா பைஜூ?
இப்படத்தில் நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வரதன், விக்ருதி, சூப்பர் சரண்யா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ.
மலையாளியான இவருக்கு தென்னிந்தியளவில் பெரும் புகழைப் பெற்றுத்தந்த திரைப்படம் பிரேமலு. இப்படத்தின் நாயகியாக நடித்து அசத்தியவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.