பிரபலத் தொடரில் இருந்து விலகிய நடிகை! ரசிகர்கள் வருத்தம்!

'நீ நான் காதல்' தொடரில் இருந்து விலகிய சாய் காயத்ரி.
serial
'நீ நான் காதல்' தொடர்ஹாட் ஸ்டார்
Published on
Updated on
2 min read

'நீ நான் காதல்' தொடரில் இருந்து நடிகை சாய் காயத்ரி விலகியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நவ 13 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'நீ நான் காதல்'. இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன் மற்றும் சாய் காயத்ரி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

ஸ்டார் மா தொலைக்காட்சியின் பிரபல தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 'நீ நான் காதல்' தொடரில் அனு பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சாய் காயத்ரி . இத்தொடரில் இருந்து அவர் விலகுவதாக இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

sai
சாய் காயத்ரிபடம்: இன்ஸ்டாகிராம்

அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், “எதிர்பாராத உடல்நிலை பாதிப்புக் காரணமாக நீ நான் காதல் தொடரில் இருந்து விலகுகிறேன். நான் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு கொடுத்த அதே அன்பை புதிதாக வரும் அனு ஆகாஷுக்கு கொடுக்கும்படி கோருகிறேன். கடவும் அருள் மற்றும் உங்களுடைய அன்பு கலந்த ஆதரவுடன் நான் உங்களை மீண்டும் சந்திப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகை சாய் காயத்ரியின் பதிவு அவருடைய ரசிகர்களுக்கு சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ashritha
அஷ்ரிதாபடம்: இன்ஸ்டாகிராம்

'நீ நான் காதல்' தொடரில் இருந்து சாய் காயத்ரி விலகிய நிலையில், இவருக்கு பதிலாக நடிகை அஷ்ரிதா நடிக்கவுள்ளார். இவர் தமிழும் சரஸ்வதியும், நாம் இருவர் நமக்கு இருவர் தேன்மொழி பிஏ, சொந்த பந்தம், கல்யாண பரிசு என பல தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

'நீ நான் காதல்' தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com