ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

விஜய்யின் கடைசிப் படம்! இன்று மாலை அப்டேட்!

நடிகர் விஜய்யின் கடைசிப் படத்துக்கான அப்டேட் பற்றி...

News image

நடிகர் விஜய்

Updated On :13 செப்டம்பர் 2024, 2:47 pm IST

நடிகர் விஜய்யின் கடைசிப் படம் குறித்த தகவலை இன்று மாலை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் கடந்த வாரம் வியாழக்கிழமை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

அந்தப் படம் திரைகளில் வெளியாகி முதல் நான்கு நாள்களில், ரூ. 288 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹெ. வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசித் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடைசிப் படம்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திலும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.

வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ள நிலையில், தனது 69-ஆவது படமே கடைசிப் படமாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்.

இந்தப் படத்தை ஹெ.வினோத் இயக்கவுள்ள நிலையில், அரசியல் அல்லது சமூக பிரச்னையை மையமாக கொண்ட கதையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.