மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கூலி - இணையத்தில் கசிந்த படப்பிடிப்பு காட்சி!

கூலி படப்பிடிப்பு காட்சி இணையத்தில் கசிந்தது...

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 8:58 am

DIN

நடிகர் ரஜினியின் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது.

ரஜினியின் 171 - வது திரைப்படமாக தயாராகி வரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தங்கத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு டீசர் வெளியிடப்பட்டது. இதனால், இப்படம் தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் நாகர்ஜுனாவை வைத்து படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. மிகுந்த கவனத்துடன் செல்போன்களை வாங்கி வைத்த பின்பே படப்பிடிப்பு பகுதிக்கு துணை நடிகர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.

அப்படியிருக்கையில், யாரோ ஒருவர் தன் செல்போனில் படப்பிடிப்பு காட்சிகளை விடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.