ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வாா்னா் சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஜூன் 25இல் ஓய்வு பெறுவதாக அறிவித்தாா்.
37 வயதான வாா்னா் டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். கடந்த 2009-இல் அறிமுகமான வாா்னா், டி20யில் 110 ஆட்டங்களில் 3,277 ரன்களையும், 112 டெஸ்ட் ஆட்டங்களில் 8,786 ரன்களையும், 161 ஒருநாள் ஆட்டங்களில் 6932 ரன்களையும் விளாசியுள்ளாா்.
மேலும் ஸ்லிப்பில் பீல்டிங் செய்வதில் மிகவும் திறமையானவா். 2018-இல் தென்னாப்பிரிக்க தொடரில் பந்தை சேதப்படுத்திய புகாரிலும் சிக்கி அணியை விட்டு நீக்கப்பட்டாா். ஓய்வு அறிவிப்புடன் 15 ஆண்டுகள் சா்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா பட ஸ்டைலில் இவர் செய்யும் ரீல்ஸ்கள் மிகவும் புகழ் பெற்றவை.
தீபாவளி, விநாயகர் சதுர்த்தி என அனைத்துக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பார்.
"டேவிட் வார்னர் ஆஸ்திரேலியரை போல் அல்லாமல் இந்தியராகவே அதிகம் இருக்கிறார். நான் அதைத்தான் அவரிடம் சொல்லுவேன். 70 சதவிகிதம் இந்தியர்; மீதி 30 சதவிகிதம் ஆஸ்திரேலியர்” என ஆஸி. வீரர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மெல்போர்னில் படப்பிடிப்பு ஒன்றில் டேவிட் வார்னர் பங்கேற்றுள்ளார். அநேகமாக இது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பாக இருக்குமென ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அல்லு அர்ஜுனின் புஷ்பா - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படப்பிடிப்பு தள்ளிப்போவதால் இந்தாண்டு இறுதியில் புஷ்பா 2 திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
2021-ல் வெளியாகிய புஷ்பா படம் வட மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் அதிர்ந்தது.