நடிகர் அர்ஜுன் தாஸ் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இதில், விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்த குட் பேட் அக்லி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறுகிறது. அதில், த்ரிஷா இணையலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்த அநீதி, ரசவாதி ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களால் சுமாரான வெற்றியையே பதிவு செய்தன. தற்போது, அதிதி ஷங்கருடன் இணைந்து காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.