நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக வெளியான சைரன், இறைவன் திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. தொடர்ந்து, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதற்கிடையே, எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி பிரதர் படத்தில் நடித்துள்ளார்.
முதல் தோற்றப் போஸ்டர் மற்றும் படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: ஓடிடியில் சரிபோதா சனிவாரம்! 5 மொழிகளில் ரிலீஸ்!
நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் இருவரும் தங்களது டப்பிங் பணிகளை முடித்துவிட்டார்கள். படத்தின் போஸ்ட்புரடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஸ்கிரீன் செவன் தயாரிப்பில் நட்டி, பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியைப் பிரிவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.