

நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள கராத்தே பாபு டீசர் வெளியாகியுள்ளது.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டாடா திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில், அரசியல் கதைகளத்துடன் கூடிய இந்தப் படத்தின் டைட்டில் டீசருக்கே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில், நடிகர்கள் நாசர், சக்தி வாசுதேவன், விடிவி கணேஷ் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படக்குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே, எந்த தனிநபரையும் குறிப்பிடவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தது.
அரசியல் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.