

நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் யார் ஒருவரையும் குறிப்பிட்டு இந்த டீசர் உருவாகவில்லை எனக் கூறப்பட்டுள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கராத்தே பாபு
டாடா திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு மற்றும் நடிகர் ரவி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள ’கராத்தே பாபு’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் கடந்த டிசம்பரில் துவங்கின.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்கும், அரசியல் கதைகளத்துடன் கூடிய இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில், நடிகர்கள் நாசர், சக்தி வாசுதேவன், விடிவி கணேஷ் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தின் டீசர் நாளை (ஜன.24) காலை 11 மணிக்கு வெளியாகுமெனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
என்ன எச்சரிக்கை?
படக்குழு வெளியிட்ட அறிக்கையில், ”இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே, எந்த தனிநபரையும் குறிப்பிடவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கதை திமுக அமைச்சரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்ற வதந்திகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் பொங்கல் வெளியீடாக வெளியான ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படத்தில் திமுக அமைச்சர் ஒருவரின் “படிச்சி படிச்சி சொன்னனே கன்டிஷனைப் ஃபாலோ பன்னுங்கடானு” என்ற வசனம் இடம்பெற்று வைரலானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.