அனுபமாவின் லாக் டவுன்: 3-ஆவது முறையாக அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதி!

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் திரைப்படம் குறித்து...
lock down film poster
லாக் டவுன் பட போஸ்டர். படம்: எக்ஸ் / லைகா
Updated on
1 min read

கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நடிகை அனுபமாவின் லாக் டவுன் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது க்யூட்டான நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதன் வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

தமிழில் கொடி, டிராகன், பைசன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் அனுபமா ’லாக் டவுன்’ எனும் படத்தில் நடித்திருந்தார்.

ஏஆர் ஜீவா எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது.

முன்னதாக டிச. 5 ஆம் தேதி திரைக்கு வரும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் டிச. 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. இந்நிலையில், வரும் ஜன.30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு என்ஆர் ரகுநாதன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். இதில், நடிகர்கள் சார்லி, நிரோஷா, மஹானா சஞ்சீவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

lock down film poster
59 வயதா? நதியா புகைப்படங்களுக்குக் குவியும் வாழ்த்துகள்!
Summary

The new release date for actress Anupama's film 'Lockdown', which was screened at the Goa Film Festival, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com