உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கணவரின் பிறந்தநாளைக் கொண்டாடிய சின்னத்திரை நடிகை!

சித்து - ஸ்ரேயா அஞ்சன் தம்பதி, வள்ளியின் வேலன் தொடரில் நடித்து வருகின்றனர்.

Shreya Anchan Siddhu

கணவர் சித்துவுடன் நடிகை ஸ்ரேயா - இன்ஸ்டாகிராம்

Published On :

சின்னத்திரை நடிகை ஸ்ரேயா தனது கணவர் சித்துவின் பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட சித்து - ஸ்ரேயா தம்பதி, வள்ளியின் வேலன் தொடரில் நாயகன் - நாயகியாக நடித்து வருகின்றனர்.

சின்னத்திரை காதல் தம்பதிகளான சித்து - ஸ்ரேயா அஞ்சனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் முதல்முறையாக ஒன்றாக நடித்த இவர்களிடையே காதல் மலர்ந்தது.

திருமணம் தொடரில் நடித்ததன் மூலம் காதலித்த இவர்கள், நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்துகொண்டனர்.

கணவர் சித்து - மனைவி ஸ்ரேயா

கணவர் சித்து - மனைவி ஸ்ரேயா - இன்ஸ்டாகிராம்

இதனைத் தொடர்ந்து ரஜினி என்ற ஜீ தமிழ் தொடரில் ஸ்ரேயா நடித்தார். அந்தத் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.

சமூக வலைதளத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றுவது ஸ்ரேயாவின் வழக்கம். சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய இந்த ஜோடியின் விடியோக்கள் அவ்வபோது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும்.

தற்போது வள்ளியின் வேலன் என்ற தொடரில் ஸ்ரேயா - சித்து தம்பதி நடித்து வருகின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தந்தையின் அன்புக்கு ஏங்கும் கிராமத்துப் பெண் பாத்திரத்தில் ஸ்ரேயாவும், அவரின் வீட்டில் பணிபுரியும் நபராக சித்துவும் நடிக்கின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில்...

பிறந்தநாள் கொண்டாட்டத்தில்... - இன்ஸ்டாகிராம்

கணவனும் மனைவியும் சேர்ந்து நடிப்பதால் இத்தொடரில் இருவரின் நடிப்பும் கச்சிதமாக அமையும் என்றும், காதல் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கணவர் சித்துவின் பிறந்தநாளை, ஸ்ரேயா தனிப்பட்ட முறையில் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். சித்துவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.