காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

குக் வித் கோமாளியில்.. மணிமேகலைக்கு பதிலாக களமிறங்கும் புகழ்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை மணிமேகலைக்கு பதிலாக நடிகர் புகழ் களமிறங்கவுள்ளார்.

News image

மணிமேகலை / புகழ் - இன்ஸ்டாகிராம்

Updated On :25 செப்டம்பர் 2024, 3:57 pm IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை மணிமேகலைக்கு பதிலாக நடிகர் புகழ் களமிறங்கவுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

தற்போது பலரும் எதிர்பாராத வகையில் குக் வித் கோமாளி -5 நிகழ்ச்சியை காமெடி நடிகர் புகழ் தொகுத்து வழங்கவுள்ளார். அவருடன் நடிகர் ரக்‌ஷனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

பிரியங்கா - மணிமேகலை மோதல்

காமெடி பொழுதுபோக்கு சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மக்களிடம் கிடைத்த வரவேற்பால், அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

குக் வித் கோமாளி - 4 நிகழ்ச்சியை மணிமேகலையும், ரக்‌ஷனும் தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ளதால், குக் வித் கோமாளி -4 நிகழ்ச்சி இம்மாதத்துடன் முடிகிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பிரியங்கா வெற்றியாளர் எனத் தெரிகிறது. எனினும் இந்த எபிஸோடுகள் இன்னும் ஒளிபரப்பாகவில்லை.

இதனிடையே பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் இடையே இந்த நிகழ்ச்சியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பெரிதும் பேசுபொருளாக மாறிய இவர்கள் விவகாரத்தைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்திருந்தார்.

இதனால் மணிமேகலையின் ரசிகர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் இருந்தவர் மணிமேகலை. இதனால், தொகுப்பாளராக மாறிய பிறகும் அவரிடம் பொழுதுபோக்குக்கு பஞ்சம் ஏற்பட்டதில்லை.

தனக சக கோமாளிகளுடன் நெருங்கிப் பழகி, புதிய கோமாளியிடமும் தன்னை உயர்த்திக்காட்டாமல், சகஜமாகப் பழகக்கூடியவர். இதனால் அவர் நிகழ்ச்சியில் இல்லாதது குக் வித் கோமாளிக்கு பெரிய இழப்பாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர்.

தொகுப்பாளராகும் புகழ்

குக் வித் கோமாளியின் அடுத்த சீசனை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது போன்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூத்த கோமாளியான நடிகர் புகழ், அடுத்த சீசனை தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் நடிகர் ரக்‌ஷனும் தொகுத்து வழங்குகிறார்.

பல திறமைக்குச் சொந்தக்காரரான புகழ், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.