சின்னத்திரை நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் பகிர்ந்த படம் அவரின் ரசிகர்களிடையே பல்வேறு கருத்துகளை உருவாக்கி வருகிறது.
சாலையில் நடைபாதை வியாபாரக் கடையில் வைத்திருந்த விலைப் பலகையில் தக்காளி என்ற சொல் தவறாக எழுதப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவர் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார். இதற்கு இணையத்தில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் லிவிங்ஸ்டன் மகளான ஜோவிதா லிவிங்ஸ்டன், சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். தமிழில் அருவி மற்றும் பூவே உனக்காக ஆகிய தொடர்களில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமடைந்தார்.
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள மெளனம் பேசியதே தொடரில் நடிக்க நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். பிற்பகலில் ஒளிபரப்பாகவுள்ள இத்தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
ஜோவிதாவின் திறமையை முழுமையாக வெளிக்காட்டும் வகையிலான கதாபாத்திரம் இதில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய ஜோவிதா, அவ்வபோது புகைப்படங்களைப் பதிவேற்றி ரசிகர்களிடம் தொடர்ந்து கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்போது நடைபாதைக் கடையில் விலைப் பலகையில் எழுத்துப் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்ததைப் பகிர்ந்து, என்னைப் போன்று தவறாக தமிழை எழுதும் மக்களைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜோவிதா இந்தப் படத்தைப் பகிர்ந்து கேலியாக அவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.