ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை - அனிருத்.
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: கவனம் ஈர்க்கும் கயல் ஆனந்தியின் மங்கை!
இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்று வரும் இப்படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் ஃபகத் ஃபாசிலுக்கான காட்சியை எடுத்துக்கொண்டிருந்தபோது அதை அடையாளம் தெரியாத நபர் விடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியிருக்கிறார். இதனால், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த விடியோ எக்ஸ் தளத்தில் பரவி வந்த நிலையில், தற்போது முடக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.