பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

எதிர்நீச்சல் படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடும் நடிகர்கள்!

படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடுவதை மழையால் கூட தடுக்க முடியாது என விடியோவில் நடிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 8:52 pm IST

எதிர்நீச்சல் தொடரில் படப்பிடிப்பிற்கு மத்தியில் நடிகர்கள் கிரிக்கெட் விளையாடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பப்பட்டு வருகிறது. 

அந்த விடியோவில் ஒரு அறையினுள் அனைவரும் கிரிக்கெட் விளையாடுகின்றனர். பருவமழை படப்பிடிப்பை வேண்டுமானால் நிறுத்தலாம், ஆனால், நாங்கள் படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடுவதைத் தடுக்க முடியாது என விடியோ குறித்து அவர்கள் பதிவிட்டுள்ளனர். 

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் 7 நாள்களிலும் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில், மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை, நீலகண்டன், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

Story image

இதுமட்டுமின்றி எதிர்நீச்சல் தொடரில், முக்கிய பாத்திரங்களுக்கு வேண்டியவர்களாக வரும் துணை பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்தவகையில் ஆதிகுணசேகரனின் மகன், அவரின் கல்லூரி நண்பர்கள் என பல பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் அமைக்கப்படுகின்றன. 

இதனால் எதிர்நீச்சல் தொடரில் மூத்த நடிகர்கள் மட்டுமின்றி இளம் நடிகர்கள் பலரும் துணைப் பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதன்காரணமாக எதிர்நீச்சல் படப்பிடிப்பு தளத்தில் மற்ற தொடர்களைக் காட்டிலும், அதிக எண்ணிக்கையிலான துணை நடிகர்கள் இடம்பெறுகின்றனர். 

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் எதிர்நீச்சல் நடிகர்கள் பலரும் வேடிக்கையாக விடியோக்களை பதிவு செய்வது, கிரிக்கெட் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம். 

Story image

அந்தவகையில் எதிர்நீச்சல் நடிகர்கள் அனைவரும் அறையில் கிரிக்கெட் விளையாடுகின்றனர். கடந்த வாரம் முழுக்க மழை பல இடங்களில் மழை பெய்ததால், படப்பிடிப்பு அவ்வபோது தடைப்பட்டுள்ளது. 
இதனால் படப்பிடிப்பு நடக்க வேண்டிய இடத்தில் நடிகர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அந்த விடியோவில், படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடுவதை மழையால் கூட தடுக்க முடியாது என விடியோவில் நடிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.