மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மலைக்கோட்டை வாலிபன் டிரைலர்!

நடிகர் மோகன் லால் - லிஜோ ஜோஸ் பெல்லிசரி கூட்டணியில் உருவாகும் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

News image
Updated On :20 ஜனவரி 2024, 3:14 pm

மலையாளத்தில் சிறந்த கதைக்களங்களில் திரைப்படங்களை உருவாக்கி  கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இறுதியாக வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமும் விமர்சன ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றது.

தற்போது, நடிகர் மோகன் லாலை வைத்து  ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய பிரசாந்த் பிள்ளை இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற ஜன.25 ஆம் தேதி வெளியாகிறது.

மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசரை வெளியாகி வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிக பொருள்செலவில் உருவான இப்படத்தை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் பல திரைகளில் வெளியாகக் காத்திருக்கிறது. மேலும், இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. பிரிட்டிஷ்  இந்தியா காலகட்டம், ஒளிப்பதிவு என காட்சிகள் பிரமிப்பைத் தருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.