ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை ஒளிபரப்பாகிய சீசன்கள், 5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைந்து, 120-க்கும் மேற்பட்ட நடன ஜோடிகளை அறிமுகப்படுத்திய பெருமை இந்த நிகழ்ச்சிக்கு உண்டு.
இந்த முறை முற்றிலும் புதுமையான வடிவத்தில் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" (Dance Jodi Dance) என்ற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக சீசனாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பெண்களின் திறமைகளைக் கொண்டாடும் விதமாக இந்த சீசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தீவிரத் தேர்வுகள் மூலம், சாதிக்கத் துடிக்கும் இளம் பெண்கள், திருமணமான பெண்கள், தாயானவர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் எனப் பலதரப்பட்ட திறமைசாலிப் பெண்கள் இந்த மேடையில் தங்களின் நடனத் திறமையை நிரூபிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
10 சிறந்த பெண் நடனக் கலைஞர்கள் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் இந்த 10 பெண் போட்டியாளர்களும், சின்ன திரையின் முன்னணி ஆண் பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து தங்களின் நடனப் பயணத்தைத் தொடர்வார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான பிரசாந்த், சிம்ரன் மற்றும் சினேகா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர். இவர்களுடன் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் வழிகாட்டிகளாக இருந்து போட்டியாளர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளனர்.
Summary
The 'Dance Jodi Dance' show, currently airing on Zee Tamil, premiered on June 13 and has been capturing the attention of viewers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








