அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

நிறைவடைகிறது கெட்டி மேளம் தொடர்!

கெட்டி மேளம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது தொடர்பாக...

News image

கெட்டி மேளம் தொடர் - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :17 ஜூன் 2026, 1:45 pm IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெட்டி மேளம் தொடர் விரைவில் நிறைவடைகிறது.

கடந்த 2025 ஜனவரியில் ஆரம்பிக்க இந்தத் தொடர், திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

லக்‌ஷ்மி நிவாசா என்ற கன்னட மொழித் தொடரின் மறு உருவாக்கமாக எடுக்கப்பட்டு வரும் இத்தொடர், கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

கெட்டி மேளம் தொடரில் சாயா சிங், ஸ்ரீகுமார் , விராட், செளந்தர்யா ரெட்டி, பிரவீனா, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சொந்தமாக வீடு கட்டி மகள்களுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க நினைக்கும் பெற்றோர், குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியில் இவர்களது சொந்த வீடு கனவு என்னவாகிறது என்பதுதான் கதை.

இந்தத் தொடரில் சாயா சிங்கிற்கு ஜோடியாக சிபு சூர்யன் நடித்து வந்த நிலையில், அவர் விலகினார். இதனால், அவருக்குப் பதிலாக நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். செளந்தர்யா ரெட்டிக்கு ஜோடியாக விராட் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கெட்டி மேளம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. இந்தத் தொடரின் படப்பிடிப்பும் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கெட்டி மேளம் தொடரின் பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகள், கூடிய விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

Summary

The serial Ketti Melam currently airing on Zee Tamil is coming to an end soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.