மலையாளத்தில் சிறந்த கதைக்களங்களில் திரைப்படங்களை உருவாக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இறுதியாக வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமும் விமர்சன ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றது.
தற்போது, நடிகர் மோகன் லாலை வைத்து ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய பிரசாந்த் பிள்ளை இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற ஜன.25 ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிக்க: பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித்?
இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் பல திரைகளில் வெளியாகக் காத்திருக்கிறது. மேலும், இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. பிரிட்டிஷ் இந்தியா காலகட்டம், ஒளிப்பதிவு என காட்சிகள் பிரமிப்பைத் தருகின்றன.
இந்நிலையில், கேரளத்தில் இப்படத்தின் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. முதல்நாளில் ஆன்லைன் வாயிலாக 1 லட்சம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், ரூ.1.24 கோடி வருவாயை இப்படம் ஈட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

9 பரிந்துரைகள்! மார்டி சுப்ரீமுக்கு ஆஸ்கர் கிடைக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம்!
பங்குனி மாதப் பலன்கள் - மேஷம்
பங்குனி மாதப் பலன்கள் - ரிஷபம்
பங்குனி மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

