நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரெட் டிராகனை மீண்டும் இயக்குகிறாரா ஆதிக் ரவிச்சந்திரன்?

நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாகத் தகவல்

News image
Updated On :11 ஏப்ரல் 2025, 3:40 pm

DIN

மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி' வியாழக்கிழமை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே ரூ. 30.9 கோடி வசூலித்ததாக, அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

குட் பேட் அக்லி படம் உலகம் முழுவதும் நேற்று வெளியான நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம் அலைமோதியது.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை (AK 64) ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க வாய்ப்புகள் இருப்பதாக, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.