ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

துணை முதல்வரான பிறகு பவன் கல்யாணின் முதல் திரைப்படம்..! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
ஹரி ஹர வீர மல்லு பட போஸ்டர்.
Updated On :11 ஏப்ரல் 2025, 10:46 am

DIN

பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் முக்கியமான நடிகராக இருக்கும் பவன் கல்யாண் தனது ஜன சேனா கட்சியை 2014-இல் துவக்கி, தற்போது ஆந்திரத்தின் துணை முதல்வராக உயர்ந்துள்ளார்.

பவன் கல்யாண் நடிப்பில் 3 படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி) வெளியாகாமல் தாமதிக்கப்பட்டு வருகின்றன.

அதில் ஹரி ஹர வீர மல்லு படத்தின் படப்பிடிப்பு லட்டு பிரச்னையின் போது மீண்டும் துவக்கப்பட்டு விரைவாக முடிக்கப்பட்டன.

கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கும் ஹர ஹர வீரமல்லு படத்தின் அப்டேடினை தயாரிப்பாளர் மெகா சூர்யா புரடக்‌ஷன்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், படம் மே.9ஆம் தேதி திரையரங்கில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கடைசியாக 2023இல் ப்ரோ படம் வெளியானது. துணை முதல்வரான பிறகு வெளியாகும் முதல் படமென்பதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.