வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஜி.வி.பிரகாஷ் பட பாடலை வெளியிடும் விஜய் சேதுபதி!

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள இடிமுழக்கம் என்ற படத்தின் பாடலை விஜய் சேதுபதி வெளியிடவிருக்கிறார்.

News image
இடிமுழக்கம் பட போஸ்டர்.
Updated On :12 ஏப்ரல் 2025, 7:11 am

DIN

நடிகர் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள இடிமுழக்கம் என்ற படத்தின் 2ஆவது பாடலை விஜய் சேதுபதி வெளியிடவிருக்கிறார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இடிமுழக்கம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

இடி முழக்கம் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சௌந்தரராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

இந்தப் படத்தை ஸ்கை மேன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் கானா விளக்கு மயிலே என்ற பாடலின் லிரிக்கல் விடியோ இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் சேதுபதி, ஆர்யா இணைந்து வெளியிடவருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.