மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

சிம்பு 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்!

நடிகர் சிம்புவின் 49-ஆவது படத்தில் நடிப்பதை நடிகர் சந்தானம் உறுதி செய்துள்ளார்.

சந்தானம், சிம்பு. - கோப்புப் படம்

Published On :

நடிகர் சிம்புவின் 49ஆவது படத்தில் நடிப்பதை நடிகர் சந்தானம் உறுதி செய்துள்ளார்.

நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தற்காலிகமாக இந்தப் படத்துக்கு ’எஸ்டிஆர்49’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தினை இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் இந்தாண்டே திரையரங்குகளில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது, நாயகனாக நடித்து வரும் சந்தானம் சிம்பு படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் சந்தானம் கூறியதாவது:

ஒருநாள் சிம்புவிடமிருந்து அழைப்பு வந்தது. என் படத்தில் நடிக்கிறாயா? எனக் கேட்டார். அவர் கேட்டால் எப்போதும் ஆமாம் என்றுதான் சொல்லுவேன்.

எனது படத்தில் பிஸியாக இருந்தாலும் சிம்பு கேட்டதால் உடனே சரி என்றேன். எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.