மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வந்த இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு குறித்து...

News image
இட்லி கடை படக்குழுவினர்.- படம்: எக்ஸ் / டௌன் பிக்சர்ஸ்
Updated On :26 ஏப்ரல் 2025, 5:55 am

DIN

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வந்த இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தப் படத்துக்கு அடுத்து இட்லி கடை எனப் பெயரிடப்பட்ட படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் நாயகியாக நித்யா மெனன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ராஜ் கிரண், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இட்லி கடை முதலில் ஏப். 10ஆம் தேதி வெளியாக இருந்தது. பின்னர், படத்தின் வெளியீட்டை அக். 1ஆம் தேதிக்கு தனுஷ் மாற்றினார்.

சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர்கள் பார்த்திபன், சத்யராஜ், அருண் விஜய் உள்ளிட்டோர் பாங்காக் சென்றிருந்தனர்.

இந்நிலையில், படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.