பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

கூலி டிரைலர் குறித்து...
பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!
Published on
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையுடன் ரஜினி, நாகர்ஜூனா, ஆமிர் கான் கதாபாத்திரங்கள் அறிமுகமாவது, சண்டைக் காட்சிகள் என டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

அதிவேகமாக, 30 நிமிடங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளும் கிடைத்திருக்கின்றன.

அதேநேரம், டிரைலரின் இறுதியில் நடிகர் ரஜினிகாந்த் நடந்து செல்லும்போது காக்கா சப்தம் கேட்க, அதைப் பார்த்து பயப்படுவதுபோல் நக்கலாக நடந்து செல்கிறார். இது சாதாரணக் காட்சியாக இருந்தாலும் விஜய் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கதை ஒன்றைக் கூறினார். அதில், “காக்கா மிகவும் குறும்பானது. வானில் பறந்துகொண்டிருக்கும் கழுகைக் கொத்த மேலே செல்லும். கழுகை நெருங்கினால் கழுகு ஒன்றும் செய்யாமல் இன்னும் மேலே செல்லும். காக்கா மீண்டும் அதை கொத்த பாயும். ஒருகட்டத்திற்கு மேல் காக்காவால் கழுகின் உயரத்தை அடைய முடியாது” என்றார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து எழுந்த சர்ச்சையால் இக்கதை நடிகர் விஜய்யைத் தாக்கி ரஜினி சொன்னதுதான் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய், “ஒரு காட்டிற்கு இருவரும் வேட்டைக்குப் போகிறார்கள். அங்கு யானை, மான், முயல், இந்தக் காக்கா, கழுகு... காடு என்றால் இதெல்லாம் இருக்கத்தானே செய்யும்." என்றார். சொல்லிவிட்டு யாருக்கு பதில் சொல்கிறோம் என்பதையும் சிரிப்பிலேயே விஜய் வெளிப்படுத்தவும் செய்தார்.

இந்த நிலையில், ஜெயிலருக்குப் பின் ரஜினி நடிப்பில் வெளியாகும் கூலி டிரைலரின் இறுதியில், காக்கா சப்தம் ஒலிக்கப்படுவதால் மீண்டும் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

Summary

crow sound placed in rajinikanth's coolie trailer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com