
சின்ன திரை நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் முதல்முறையாக நடுவராகப் பங்கேற்கவுள்ளார். அவருடன் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் மற்றும் ஆல்யா மானசா ஆகியோரும் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியை நடிகை மணிமேகலை தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கு முன்பு இவர், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மற்றொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னைக்குப் பிறகு, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளராகியுள்ள மணிமேகலைக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் சிங்கிள் பசங்க என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், சின்ன திரை நாயகி ஆல்யா மானசா, பிக் பாஸ் பிரபலம் ஸ்ருதிகா அர்ஜுன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சமூக வலைதள பிரபலங்கள் 10 பேர் பங்கேற்கவுள்ளனர். அந்த 10 திறமையாளர்களின் கூட்டு நடவடிக்கை, நடிப்புத் திறன், நகைச்சுவை திறன் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையிலான போட்டிகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளன.
ரசிகர்களுக்கு கலவையான உணர்வுகளுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கப்போகும் இந்த நிகழ்ச்சியை நடிகை மணிமேகலை தொகுத்து வழங்கவுள்ளதால், நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | தொடரிலிருந்து விலகியவரை நினைவுகூர்ந்த பாக்கியலட்சுமி நடிகர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.