நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அனுஷ்காவின் காதி டிரைலர்!

காதி டிரைலர் வெளியீடு...

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 5:17 pm IST

அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றிருந்ததைத் தொடர்ந்து இப்படம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தனர்.

ஆனால், படத்தின் பணிகள் முழுமையாக முடிவடையாததால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதனுடன் இப்படம் வருகிற செப்.5 ஆம் தேதி வெளியாகுமென அறிவித்துள்ளனர். நீண்ட காலம் கழித்து அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் படமென்பதால் காதிக்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது!

Summary

actor anushka's ghaati movie trailer out now. this movie will release on sept. 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.