காதலரைக் கரம்பிடித்த ஆஹா கல்யாணம் நடிகை!

நடிகை அக்‌ஷயா - ஜெய்னு ஜெய் திருமணம் குறித்து...
நடிகை அக்‌ஷயா - ஜெய்னு ஜெய்.
நடிகை அக்‌ஷயா - ஜெய்னு ஜெய்.
Updated on
1 min read

ஆஹா கல்யாணம் தொடரில் நாயகியாக நடித்த நடிகை அக்‌ஷயா, தனது நீண்டகால நண்பர் ஜெய்னு ஜெய்யை கரம்பிடித்துள்ளார்.

இவர்களுக்கு உற்றார், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அக்‌ஷயா - ஜெய்னு ஜோடிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆஹா கல்யாணம் தொடரில் மகாலட்சுமி என்ற பாத்திரத்தில் அக்‌ஷயா நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தார்.

இவர் பகலறியான் படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து மின்மினி படத்தில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்

இவர் தனது நீண்டகால நண்பரான ஜெய்னு ஜெய்யை காதலித்து வந்த நிலையில், அண்மையில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தப் புகைப்படங்களை இணையத்தில் வைரலானது.

நடிகை அக்‌ஷயா - ஜெய்னு ஜெய்.
நடிகை அக்‌ஷயா - ஜெய்னு ஜெய்.

இந்த நிலையில், அக்‌ஷயா - ஜெய்னு ஜெய் ஜோடிக்கு திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் ஜெய்னு ஜெய் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Actress Akshaya - Jainu Jai's wedding

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com