மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்ட பிக் பாஸ் பிரபலங்கள்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்டனர்.
தீபக், முத்துக்குமரன்
தீபக், முத்துக்குமரன்இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்டனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்காக பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமரன், தீபக், செளந்தர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த ஜனவரியுடன் நிறைவு பெற்றது. இதில் முத்துக்குமரன் வெற்றியாளராக வாகை சூடினார். அதற்கு அடுத்ததடுத்த இடங்களில் செளந்தர்யா மற்றும் வி.ஜே. விஷால் இருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு நேர்காணல்களிலும் படப்பிடிப்புகளிலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்கள் பாதைகளில் பயணித்து வருகின்றனர்.

இதனிடையே பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களுக்காக பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இதில் ஜெஃப்ரி, செளந்தர்யா, ரயான், முத்துக்குமரன், தீபக், மஞ்சரி, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா குப்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிக் பாஸ் வீட்டில் நெருக்கமாக இருந்த போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து நடனம் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஜெஃப்ரி, செளந்தர்யா, ரயான்
ஜெஃப்ரி, செளந்தர்யா, ரயான்inStagram

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இது குறித்த எந்தவித அறிவிப்பையும் தொலைக்காட்சி நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | மெளனம் பேசியதே தொடரிலிருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.