பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஜன நாயகன் படத்தில் ஷ்ருதி ஹாசன்?

ஷ்ருதி ஹாசன் நடிகர் விஜய்யுடன் நடிக்க உள்ளதாகத் தகவல்...

Published On :

நடிகை ஷ்ருதி ஹாசன் ஜன நாயகன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறிவித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.

ஜன நாயகன் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

ஜன நாயகன் படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமத்தை பிரபல நிறுவனம் ரூ. 75 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் இணைய உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறுகின்றனர்.

ஸ்ருதி ஹாசன் நடிகர் ரஜினியுடன் கூலி படத்திலும் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.