ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் இரண்டாவது பாடலான ’மண்ட பத்திரம்’ வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
பேச்சிலர் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்த திவ்யபாரதியே, கிங்ஸ்டன் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். தனது நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமான கிங்ஸ்டன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க | 'காதல்', 'கவிதை': சினேகன் குழந்தைகளுக்கு கமல் சூட்டிய பெயர்!
கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவராக நடிக்கிறார்.
யுகபாரதி வரிகளில் ஜிவி பிரகாஷ் குமார், சுப்லக்ஷினி இணைந்து பாடிய இந்தப் படத்தின் முதல் பாடலான ’ராசா ராசா’ சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இரண்டாவது பாடலான ’மண்ட பத்திரம்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை கானா ஃபிரான்சிஸ் எழுதிப் பாடியிருக்கிறார்.
கிங்ஸ்டன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில், இப்படம் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெத்தி இரண்டாவது பாடல்!

கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷின் மெண்டல் மனதில் பட முதல் பாடல்!

தாய் கிழவி இரண்டாவது பாடல்!
பறந்தேனே... யூத் இரண்டாவது பாடல்!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

