மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்... டைட்டில் டீசர் வெளியீடு!

சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் இணைந்துள்ள புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

Published On :

சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் இணைந்துள்ள புதிய படமான ‘மதராஸி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 23-வது படமான இதில் துப்பாக்கி பட வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கின்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு சில வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

பொங்கலை முன்னிட்டு டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் டைட்டில் டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

மதராஸி

மதராஸி

இதனைத் தொடந்து, எஸ்கே - 23 படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ’மதராஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.