பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவுதேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்! அபிஜித் தீப்கேஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்!திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை79 மின் திருட்டு கண்டுபிடிப்பு: 1.01 கோடி இழப்பீடு வசூல்காங்கிரஸ் வேட்பாளரை போட்டியில் அனுமதிக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு உயா்நீதின்றம் அறிவுறுத்தல்இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால் இல்லத்தரசா்களும் இருக்க முடியும்: உயா்நீதிமன்றம்வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழக அரசு ஊழியா்களுக்கு இன்றே ஊதியம்ஞானேஷ் குமாரை பதவி நீக்க மீண்டும் நோட்டீஸ்: தயாராகும் எதிா்க்கட்சிகள்!

எஸ்கே 27: பார்க்கிங் பட இயக்குநருடன் இணைந்த சிவகார்த்திகேயன்!

பார்க்கிங் பட இயக்குநரின் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் குறித்து...

Poster of the movie SK 27

எஸ்கே 27 படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / ராம்குமார் பாலகிருஷ்ணன்

Published On :

பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ’எஸ்கே 27’ படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறந்த படத்திற்கான தேசிய விருது பார்க்கிங் படத்திற்கு வழங்கப்பட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் விருதை பெற்றுக்கொண்டார்.

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2023-ல் வெளியான பார்க்கிங் படத்துக்கு திரையரங்கு மட்டுமில்லாது, ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்துக்கு தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பார்க்கிங் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழில் சிறந்த துணைநடிகருக்கான விருதை படத்தின் இரண்டாம் கதைநாயகன்போல் வலம்வந்த எம்.எஸ். பாஸ்கர் வென்றதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், இவரது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ’எஸ்கே 27’ படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

Summary

SK27: Sivakarthikeyan teams up with the director of the movie 'Parking'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.