துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

ரசிகர்களைக் கவர்ந்த அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சி!

அபூர்வ சிங்கீதம் குறித்து...

Published On :

நடிகர் கமல்ஹாசன் சார்பில் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு நடந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.

தென்னிந்தியளவில் பிரபலமான இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். நடிகர் கமல்ஹாசனை வைத்து பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

தனித்ததுவமிக்க இயக்குநரான சிங்கீதம் சீனிவாச ராவுக்கு மரியாதை செய்யும் விதமாக சில வாரங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்தார்.

இதில், இயக்குநர்கள் மணிரத்னம், சந்தான பாரதி, நாக் அஸ்வின், லோகேஷ் கனகராஜ், சிதம்பரம் நடிகர்கள் சித்தார்த், சிவகார்த்திகேயன், நாசர், பசுபதி, கோவை சரளா மற்றும் இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

4 நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் திரையிடப்பட்டு உரையாடல் நிகழ்ந்தது.

மிக சுவாரஸ்யமாகவும் அதேநேரம் ஒரு திரைப்படத்திற்குப் பின் இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் அனுபவங்களை சிங்கீதம் சீனிவாச ராவ் பகிர்ந்து கொண்டது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது. காரணம், 93 வயதான சிங்கீதம் சீனிவாசராவ் இப்போதும் நினைவுகளைத் துல்லியமாக மீட்பதும் நகைச்சுவையாக பேசுவதுமாக இருக்கிறார்.

அபூர்வ சிங்கீதம் எனப்பெயரிடப்பட்ட இந்நிகழ்வின் ஒவ்வொரு நாள் உரையாடலையும் யூடியூபில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பதிவேற்றியுள்ளது. இவை, ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.