ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

இளமையுடன் உயிர் நீத்தார்... சிங்கீதம் சினீவாச ராவுக்கு கமல் ஹாசன் இரங்கல்!

கமல் ஹாசனின் இரங்கல் பதிவு...

சிங்கீதம் சினீவாச ராவ்

Published On :

இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த சிங்கீதம் சீனிவாச ராவ், உடல்நலக் குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானாா். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் 1974-இல் வெளியான ‘திக்கற்ற பாா்வதி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானாா். அந்தப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தொடா்ந்து, நடிகா் கமல்ஹாசன் நடித்த ‘ராஜபாா்வை’, ‘பேசும் படம்’, ‘அபூா்வ சகோதரா்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘மகளிா் மட்டும்’, ‘காதலா காதலா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ மற்றும் பிரபு நடித்த ‘சின்ன வாத்தியாா்’ உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கினார்.

நடிகர் கமல் ஹாசனுடன் நல்ல வழிகாட்டி உறவுடன் இருந்தவர் என்பதால் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற நிகழ்ச்சியையும் நடத்தில் பல இயக்குநர்கள், நடிகர்களை வரவழைத்து அனுபவ நிகழ்ச்சியாகவும் மாற்றினார்.

இந்த நிலையில், சிங்கீதம் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கமல் ஹாசன், ‘சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில், இளமையுடன் உயிர் நீத்தார். அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்ற வேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள் நானும் உளேன்.’ எனப் பதிவிட்டுள்ளார்.

Actor Kamal Haasan has expressed his condolences over the passing of director Singeetham Srinivasa Rao.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.