நடிகர் விஜய் நடித்துவரும் அவரது 69-வது படத்தின் அப்டேட் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.
நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ரசிகர்களைக் கவர்ந்த அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சி!
இந்த நிலையில், இப்படத்தை தயாரித்துவரும் கேவிஎன் புரட்கஷ்ன்ஸ் நிறுவனம், நேற்று (ஜன. 1) புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஜன. 2 ஆம் தேதி முக்கிய அறிவிப்புக்காக காத்திருங்கள் எனத் தெரிவித்திருந்தது.
இது, விஜய் - 69 படத்தின் அப்டேட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக கேவிஎன் தெரிவித்துள்ளது.
இதனால், விஜய் ரசிகர்கள் புத்தாண்டு அன்று தளபதி - 69 அப்டேட் இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நயன்தாரா, கவின் நடித்துள்ள ஹாய் படத்தின் 3வது பாடல் தேதி!

வெளியானது ஜன நாயகன்! - இன்றைய செய்திகள் ஜூலை 23 - நேரலை

திரையரங்குகளில் படம் பார்ப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி: அமைச்சர் சம்பத்குமார்

காஞ்சியில் களைகட்டிய ஜன நாயகன் வெளியீடு: ரசிகர்களுக்கு அசைவ பிரியாணி!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



