இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஜெயிலர் - 2 அறிவிப்பு டீசர் தேதி!

ஜெயிலர் - 2 அறிவிப்பு டீசர் குறித்து...

News image
Updated On :12 ஜனவரி 2025, 12:51 pm

DIN

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் - 2 படத்தின் அறிவிப்பு டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்குப் பின் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைவதாகக் கூறப்பட்டது. ரஜினியின் பிறந்த நாளான்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வரவில்லை.

புத்தாண்டு அன்று அறிவிக்கப்படலாம் என ரசிகர்களிடம் ஆவல் எழுந்தது. ஆனால், அதற்கான எந்த தகவலும் இல்லை.

தற்போது, சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய விடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், அடுத்தது ’சூப்பர் சாகா’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இது, ஜெயிலர் - 2 அறிவிப்பு என்பது உறுதியானது.

இந்த நிலையில், ஜெயிலர் - 2 அறிவிப்பு டீசர் ஜன. 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். நேரடியாக யூடியூப் மற்றும் சில திரைகளிலும் வெளியிட உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.