டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

விஜய் சேதுபதிக்கு பிடிக்காத நிகழ்ச்சி பிக் பாஸ்!

விஜய் சேதுபதிக்கு பிடிக்காத நிகழ்ச்சியாக பிக் பாஸ் இருந்ததாக விஜய் தொலைக்காட்சியின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News image

விஜய் சேதுபதி

Updated On :20 ஜனவரி 2025, 4:29 pm IST

நடிகர் விஜய் சேதுபதிக்கு பிடிக்காத நிகழ்ச்சி பிக் பாஸ் என விஜய் தொலைக்காட்சியின் தலைமை இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டும் என விஜய் சேதுபதியிடம் கேட்டபோது அவர் இந்த பதிலைக் கூறியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. அக்டோபர் 6 முதல் நடைபெற்றுவந்த இந்த நிகழ்ச்சி, 100 நாள்களைக் கடந்து 106 நாள்களுக்கு ஒளிபரப்பானது. பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார். அவருக்கு அடுத்தபடியாக நடிகை செளந்தர்யா தேர்வு செய்யப்பட்டார். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இந்த வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இறுதி நாளில் வெற்றியாளர் யார் என்பதை அறிவிக்கும் முன்பு விஜய் சேதுபதிக்கு பயண விடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது பேசிய விஜய் தொலைக்காட்சி தலைமை இயக்குநர் விஜய், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கோரி விஜய் சேதுபதியிடம் கேட்டுக்கொண்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ''பிக் பாஸ் 8 வெற்றியாளர் யார் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒவ்வொரு சீசன் ஆரம்பிக்கும்போது பதட்டம் இருக்கும். ஆனால் இந்த சீசன் வெளியாகும்போது நாங்கள் வெளியிட்டது ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்பதுதான்.

இம்முறை சிறப்பான போட்டியாளர்கள் அமைந்தனர். இம்முறை அமைந்தது போன்று வேறு எந்த சீசனிலும் போட்டியாளர்கள் அமையவில்லை. உங்கள் முயற்சிக்கு நான் தலைவணங்குகிறேன்.

வெளி உலகத்தில் உள்ள மக்கள் நம்மைப் பற்றி மதிப்பிடுகிறார்கள் எனத் தெரிந்தும் நீங்கள் விளையாடியது சிறப்பு வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக்கோரி விஜய் சேதுபதியிடம் பேசியபோது அவர் முதலில் மறுத்துவிட்டார். பிக் பாஸ் எனக்குப் பிடிக்காத நிகழ்ச்சி எனக் கூறி முடித்துக்கொண்டார். ஆனால், பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்தார். நான் என்ன செய்ய வேண்டும் எனக் கூறுங்கள் அதன்படி நான் செய்கிறேன் எனக் கூறினார்.

முதல் இரு வாரங்கள் கடந்தன. அதன் பிறகு விஜய் சேதுபதி எங்களுக்கு சில அறிவுரைகளைக் கூறினார். அது எந்த அளவுக்கு என்றால், அடுத்த சீசனில் போட்டியாளர்கள் எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதை மக்கள் அறியும்படி இருக்க வேண்டும் எனக் கூறினார். அது சிறப்பான யோசனை. அடுத்த சீசனில் அவ்வாறு நிகழ்ச்சி அமைக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.